புஷ்ரா பெண்கள் அரபிக் கல்லூரி நடத்­திய திரு­மண நிகழ்வு: உலமாக்கள், மவு­ல­விக்கள் பங்­கேற்­பு

புஷ்ரா பெண்கள் அரபிக் கல்லூரி சார்பாக ஏழை பெண்­களின் துயர் துடைக்கும் சமூக திருமணம் அம்பத்தூர் HPM பேலஸில் கடந்­த ௧௬ம் தேதி­யன்று நடந்­தது. திருமண நிகழ்ச்சியின் முன்­பாக மவுலவி முஹம்மது ஹுசைன் நாஸிரீ தலைமையில் புர்தா கஸிதா நடைபெற்றது. அல்ஹாஜ் அமானுல்லாஹ் (புஷ்ரா டிரஸ்ட் -தலைவர் ) முன்­னிலை வகித்தார். அம்பத்தூர் சுற்றுவட்டார உலமாக்கள் கலந்து கொண்­டனர். அல்ஹாபிழ் அப்துல் ரசாக் கிரா­அத் ஓதி நிகழ்ச்சி துவங்க நூருன் அலாநூர் வரவேற்புரை நிகழ்த்த, மவுலவி அப்துல் காதர் சமாதானி (முதல்வர் புஷ்ரா மகளிர் அரபிக் கல்லூரி) நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் துவக்க உரையை மவுலவி முஹம்மது நூருத்தீன் அஸ்ஹரி ( பேராசிரியர் புஸ்ரா மகளிர் அரபிக் கல்லூரி)நிகழ்த்தினார்.

வாழ்த்துரையை மௌலவிமார்கள் காஜா மொய்தீன் ஆலிம், முஹம்மது முனீர் ஜமாலி, ஹபிபுல்லாகான் பாகவி, மன்சூர் சிராஜி, மாலிக் முகமது சமதானி, அப்துன் நையிம் ஜமாலி, அஸ்ஹருதீன் கலிமி, ஆகியோர்கள் வரிசையாக நிகழ்த்தினார்கள். நிக்காஹ் குத்பாவை மௌலவி அப்துல்லாஹ் அல்தாபி (நூருல்ஹுதா மஸ்ஜித் இமாம் மண்ணூர் பேட்டை) நிகழ்த்தினார். நிக்காஹ் துவாவினை மௌலவி முஹம்மது சலீம் சிராஜி ( ஜாமியா நாசீர் சுன்னா தலைவர் -புழல் ) ஓத, நிகழ்ச்சி தொகுப்பினை மௌலவி கமாலுத்தீன் சக்காபி (புஷ்ரா மகளிர் கல்லூரி PRO) தொகுத்து வழங்கினார். அல்ஹாஜ் சாதிக் பாஷா நன்­றி­யுரை ஆற்றினார்.

மேலும் இந்த திரு­மண நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக, ஹாஜி மன்சூர்,ஹாஜி பஷீர் அஹ்மத், ஹாஜி பீர் முஹம்மது, முஹம்மது ஷா, ஷாபுத்தீன், மீரான், சையது பாஹிம், மாலிக் முஹம்மத், முஹம்மது ஷரீப், ஹாஜி இப்னு, ஜனாப் அப்பாஸ், பக்கீர் மைதீன், நாகூர் அனிபா, நைனா முஹம்மத், காயல் ஜெஸ்முதீன், மௌலவி சஜீர் அன்வரி,கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி துஆ செய்தார்கள்.

Comments (0)
Add Comment