அழைக்கிறது தாம்பரம் காவல் ஆணையரகம்: மீனவ இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

173

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவ இளைஞர்களை ஊர்க்காவல் படையில் சேர்க்க ஆள்சேர்ப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விருப்பமுள்ள மீனவ இளைஞர்கள் இதை ஒரு நல்லவாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். ஊர்க்காவல் படையில் சேர 20 வயது பூர்த்தியான, 10-ம் வகுப்பு படித்த, தழிழ்நாட்டைச் சார்ந்த, நற்பண்புகள் கொண்ட தன்நலம் கருதாத சேவை மனப்பான்மை கொண்ட தகுதியான மீனவ இளைஞர்கள் அணுகலாம்.

1. 20 முதல் -45 வயது வரை (1979 வருடத்திற்கு பிறகு பிறந்தவர்கள்)
2. உயரம் 165 செ.மீ
3. மார்பக சுற்றளவு 81-86 செ.மீ

தொடர்புக்கு: காவல் உதவி ஆணையாளர்  (ஆயுதப்படை)
ஊர்க்காவல் படை  (பொறுப்பு)
தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை
பதுவஞ்சேரி, சென்னை- 126.

தொலைபேசி எண்: ஊர்க்காவல் படை தளபதி பார்த்திபன் – 98842 33744.
ஊர்க்காவல் படைப்பிரிவு தலைவர் கோபால்- 99400 98733.