கிழக்கு கடற்­கரைச் சாலைப்பகு­திகளில் தொட­ரும் உயி­ரி­ழப்பு சம்­ப­வ­ங்கள் * தாம்­பரம் போலீஸ் கமி­ஷனர் அமல்ராஜ் முக்­கிய நட­வ­டிக்­கை

37

சென்னை கோவளம், கானத்தூர் உள்­ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடலில் மூழ்கி இறக்கும் சம்­ப­வங்கள் தொட­ரு­வ­தை­ய­டுத்து – கட்டுப்பாடுகளை தாம்­பரம் போலீஸ் கமி­ஷனர் தீவிரப்படுத்தியுள்ளார்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட, கிழக்கு கடற்கரை சாலை (ECR) பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகிறது. கடந்த 21.02.26 அன்று, கானத்தூர் கடற்கரை பகுதியில் சுற்றுலா வந்தவர்களில் இருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். கடந்த ஓராண்டில் தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கானத்தூர், கோவளம், முட்டுக்காடு, உத்தண்டி, ரெட்டிகுப்பம் மற்றும் நயினார்குப்பம் ஆகிய கடற்கரை பகுதிகளில் 17 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள். கோவளம் கடற்கரையில் மூன்று மாணவர்கள் மற்றும் ஒரு தனியார் ஊழியர் உட்பட 4 பேரும், புளு பீச் கடற்கரை மற்றும் செம்மஞ்சேரிகுப்பம் பகுதிகளில் 2 பேரும், நயினார் குப்பத்தில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 2 பேரும், உத்தண்டியில் 2 பேரும், மேலும் முட்டுக்காடு, ஆலிவ் கடற்கரை, கோல்டன் பீச் மற்றும் கரிக்காட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில், மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

விடுமுறை நாட்களைக் கழிக்க கடற்கரைக்கு வருவோர், போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கையின்றி ஆழமான பகுதிகளுக்குச் செல்வதால் இத்தகைய துயரச் சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே, இதனைத் தடுக்க பொதுமக்கள் கீழ்க்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுமாறு தாம்பரம் போலீஸ் கமி­ஷனர் அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.