கள்­ள­நோட்­டுக்­களை தனியார் வங்­கியில் டெபாசிட் செய்ய முயன்ற இருவர் சிசிபி போலீ­சால் கைது

97

கிண்டி பகுதியில் தனியார் வங்கியில் பல லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற வழக்கில் 2 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்­த­னர்.

நேற்று (07.07.2025) சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் HDFC வங்கியில் வாடிக்கையாளர் போர்வையில் ரூபாய்.2,01,500- மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒருவர் டெபாசிட் செய்ய முயன்றார். அப்போது, வங்கி ஊழியர் வாடிக்கையாளர் கொடுத்த ரூபாய் நோட்டுகளை சரிபார்த்த போது அதில் ஒரு 500 ரூபாய் நோட்டை தவிர மற்ற (ரூ.500X402-ரூ.2,01,000/-) அனைத்தும் போலியானது என தெரியவந்தது.

இதுகுறித்து வங்கியின் மேலாளர் ஈஸ்வர் சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசில் புகார் அளித்­தார். உதவி ஆணையாளர் காயத்ரி, மற்றும் காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தனர். வங்­கியில் கள்­ள­நோட்­டுக்­களை டெபாசிட் செய்ய முயன்ற நபர் கட­­லூரைச் சேர்ந்த செந்தில்குமார் (44) என்பது தெரிய­வந்­த­து. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். அவரிடமிருந்து மொத்தம் (1022X500-5,11,000/-) ரூபாய். 5.11 லட்சம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரான சென்னை பம்­மலை சாம் பிரவீன் சந்தன் ராஜ் (44 என்பவரை இன்று (08.07.2025) கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற தலைமறைவு எதிரிகளை காவல் குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செயயப்பட்ட எதிரி சாம்பிரவீன் சந்தன்ராஜ் விசாரணைக்குப்பின்னர் இன்று (08.07.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.