நிரந்­தர வைப்புக் கணக்கில் ரூ. 76 லட்சம் மோசடி வழக்­­கு: மேலும் ஒரு பெண் கைது: சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீஸ் நட­வ­டிக்­கை

71

வங்கி மேலாளர் உதவியுடன் நிரந்தர வைப்பு கணக்கில் இருந்த பணத்தை மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர்.

ரவி என்பவர் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் என்பவர்களின் பொது அதிகாரத்தின் அடிப்படையில் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் ஆகியோர் Induslnd Bank, Anna Nagar Branch ல் வங்கி கணக்கு வைத்து பராமரித்து வந்துள்­ளார். மேற்படி வங்கிக் கணக்கில் ஒன்றான Alamu Memorial Trustல் 3 Fixed Deposit மொத்தம் Rs. 2,64,00,000, மற்றொரு வங்கிக் கணக்கில் 6 Fixed Deposit Rs. 1,40,70,000 செலுத்தியுள்ளனர்.

மேற்கண்ட FD கணக்குகள் அனைத்தும், வங்கி கணக்கின் உரிமையாளர் விஜய், ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் அனுமதியின்றி Pre Mature Closing செய்து, அவர்களது Cheque கள், கையொப்பத்தை போலியாக பயன்படுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் Rs.4,36,70,000- பணப்பரிவர்த்தனை செய்து மோசடி செய்துள்­ளனர்.

இந்த மோசடி சம்­பவம் தொடர்­பாக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அரு­ணிடம் புகார் அளிக்­கப்­பட்­டது. கடந்த 21.05.2025 ம் தேதி மத்திய குற்றப்பிரிவு, உதவி ஆணையாளர் கண்ணன் வழக்குப் பதிவு செய்து, ஆய்வாளர் மைனர்சாமி புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், காவல் கூடுதல் ஆணையாளர் ராதிகா தலைமையில், மத்தியக் குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினர் விசாரணை நடத்­தி­னர்.

Induslnd Bank, Anna Nagar Branchல் வாதியின் வங்கி கணக்கில் Rs. 4,36,70,000 இருப்பது அந்த வங்கியின் மேலாளராக பணிபுரிந்த மஞ்சுளா தியாகராஜன் என்பவர் அறிந்து அதை சட்ட விரோதமாக சுயலாபம் அடைய வேண்டும் என்று திட்டம் தீட்­டி­யுள்ளார். நம்பிக்கையின் அடிப்படையிலும் கொடுத்த Cheque களை மோசடியாக பயன்படுத்தி நாகேஷ்வரன் மற்றும் ஆறுமுககுமார் ஆகியோர்களின் வங்கி கணக்குகளுக்கு, வாதியின் வங்கி கணக்கிலிருந்து மோசடியாக பணத்தை மாற்றி அபகரித்த குற்றத்திற்காக இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக தலைமறைவான மஞ்சுளாவின் மோசடிக்கு கூட்டு சேர்ந்த சியாமளா என்பவரின் வங்கி கணக்கிற்கு, வாதியின் வங்கி கணக்கிலிருந்தும், மற்ற எதிரிகளின் வங்கி கணக்குகளிலிருந்தும் மொத்தம் Rs. 76,33,644- ரூபாயை மோசடியாக பணத்தை மாற்றி அபகரித்த குற்றத்திற்காக சென்னை அடை­யா­றைச் சேர்ந்த சியாமளா (-50) இன்று 09.07 2025 ம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி மோசடி கும்பலை கைது செய்த வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல், உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.
*****