சென்­னையில் போலி ஏசியன் பெயிண்­டுகள் தயா­ரித்து விற்ற 3 பேர் கைது: அறிவுசார் சொத்­து­ரிமை அம­லாக்­கப்­பி­ரிவு போலீஸ் நட­வ­டிக்­கை

98

சென்­னையில், அறி­வுசார் சொத்­து­ரிமை அம­லாக்­கப்­பி­ரிவு போலீசார் நடத்­திய சோத­னையில் போலி ஏசியன் பெயிண்­டு­களை பறி­முதல் செய்து மூவரை கைது செய்­த­னர்.

சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலி தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களை கண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவனமான SGS IPR CONSULTANCY, New Delhi-யின் உதவி மேலாளர் தம்புசாமி சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்­தார். அதில் முன்னணி நிறுவனமான ஏசியன் பெயிண்ட் பிராண்டுகளை போல போலியான பெயிண்ட்களை தயாரித்து விற்பனை செய்யப்­ப­டு­வ­தா­கவும் அது குறித்து நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் தெரி­வித்­தி­ருந்தார். அம­லாக்­கப்­பி­ரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் உத்­த­ரவின் பேரில் ஐஜி செந்­தில்­கு­மாரி, எஸ்பி சாம்சன் தலை­மை­யி­லான போலீசார் இது குறித்து விசா­ரணை நடத்­தி­னர்.

சென்னை, போரூரை அடுத்த அய்யப்பன் தாங்கல், தண்டலம் பகுதியில் போலி ஏசியன் பெயிண்­டுகள் கடை­களில் விற்­கப்­ப­டு­வது தெரி­ய­வந்­தது. அது தொடர்­பாக தொடர் விசா­ரணை நடத்­தி­யதில் அதே பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி, ஆரோக்கியசாமி மற்றும் சரவணன் ஆகியோர் போலி தயாரிப்புகளை விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டது. மூவரும் விலை மலிவான போலியான பெயிண்டுகளை வாங்கி அதை முன்னணி நிறுவனமான ஏசியன் பெயிண்ட் நிறுவனத்தின் பெயர் கொண்ட பக்கெட்டில் அடைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு காவல்­து­றை­யினர் வழக்­குப்­ப­திவு செய்து மூவ­ரையும் கைது செய்­த­னர். அவர்களிடமிருந்து ரூ.1,73,000- மதிப்புள்ள போலி ஏசியன் பெயிண்ட் பக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர், செய்து வருகின்றனர்.
போலி ஏசியன் பெயிண்­டு­களை விற்ற கும்­பலை கைது செய்த தனிக்­கு­ழு­வி­னரை தமி­ழ­க அமலாக்­கப்­பி­ரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் வெகு­வாக பாராட்­டி­னார். மேலும் போலி பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்த தகவல்களை spiprec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ முகவரியிலோ அல்லது 044- 28511587 தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்குமாறு பொது மக்களை அம­லாக்­கப்­பி­ரிவு காவல்­துறை கேட்டுக்கொண்டுள்­ள­து.