ஆவடி காவல் ஆணையரகத்தில் 85 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 70 கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் எரித்து தீயிலிட்டு அழிக்கப்பட்டன.
ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில் 85 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவினை அழிப்பதற்காக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது. பறிமுதல் கஞ்சாவை அழிப்பதற்கு ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் ஆவடி மாநகர காவல் கூடுதல் ஆணையாளர் பவானீஸ்வரி, ஆவடி காவல் மாவட்ட காவல் துணை ஆணையாளர் ஐமன் ஜமால் மற்றும் தடய அறிவியல் உதவி இயக்குநர் ஷோபியா ஆகியோர் கொண்ட போதை பொருள் அழிப்பதற்கான குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று இன்று (30.05.2025) செங்கல்பட்டு, தென்மேல்பாக்கம் என்ற இடத்தில் அமைந்துள்ள G.J. Multiclave India Pvt Ltd என்ற நிறுவனத்தில் உள்ள நிறுவனத்தில் உள்ள Insulator ல் மேற்படி 84 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 70 கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டன. ஆவடி காவல் ஆணையரகத்தில் இதே போன்று கடந்த இரண்டு ஆண்டுகளில் 106 வழக்குகளில் 721 கிலோ அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.