அகில இந்திய காவல் இறகுப் பந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி: ஐஜி ராஜேஷ்வரி தங்கம், வெள்ளி, வெங்கலப்பதக்கங்களை வென்று சாதனை
கேரளாவில் காவல்துறை சார்பில் நடந்த இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெங்கலப்பதக்கங்களை வென்று தமிழக காவல்துறை ராஜேஷ்வரி சாதனை படைத்துள்ளார்.

கேரளா மாநில காவல்துறை சார்பில் 1-வது அகில இந்திய காவல் இறகுப்பந்து குழு சாம்பியன்ஷிப் போட்டிகள் 2024-–25 கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள Regional Sports Centre, Rajiv Gandhi Indoor Stadium, Kadavanthra- இம்மாதம் 11.04.2025 முதல் 15.04.2025 வரை நடைபெற்றது.
இதில் தமிழக காவல்துறை சார்பில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 32 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஆக மொத்தம் 37 நபர்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இக்குழுப்போட்டிகளில் மேஜைப் பந்து (Table Tennis) விளையாட்டில் டிஜிபி அலுவலக தலைமையிட டிஜிபி வினித்தேவ் வாங்கடே இறகுப் பந்து போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் 1-வெள்ளியும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐஜி ராஜேஸ்வரி இறகுப் பந்து போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் 1-வெள்ளியும், மேஜை பந்து போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் 1-தங்கம் மற்றும் 1-வெள்ளியும், தனிநபர் போட்டியில் 1- வெண்கலமும் வென்றனர்.
மேலும் மதுரை மாநகர காவல் ஆய்வாளர் ஹேமமாலா இறகுப் பந்து போட்டியில் தனிநபர் பிரிவில் 1-தங்கம், இரட்டையர் பிரிவில் 1-வெள்ளி மற்றும் 1-வெண்கலமும், எஸ்பிசிஐடி இன்ஸ்பெக்டர் ஜானகி இறகுப் பந்து போட்டி இரட்டையர் பிரிவில் 1-வெள்ளி மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் 1- வெண்கலமும், , IS-GCP இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மேஜைப் பந்து போட்டியில் 2-வெள்ளியும், திருச்சி லஞ்ச ஒழிப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் இறகுபந்து போட்டியில் 1-வெண்கலமும், சார்பு ஆய்வாளர், மதுரை மாவட்டம் ராமசாமி இறகு பந்து போட்டியில் 1- வெள்ளியும், சென்னை சிபிசிஐடி தலைமைக் காவலர் ஷிஜி அவர்கள் மேஜை பந்து போட்டியில் 1-வெள்ளி மற்றும் 1-வெண்கலமும், ஆவடி மாநகர தலைமைக்காவலர் மைதிலி மேஜைப் பந்து போட்டியில் 1-வெண்கலமும் ஆக மொத்தம் 2-தங்கம், 6- வெள்ளி மற்றும் 4- வெண்கலப் பதக்கங்களும் பெற்று தமிழ்நாட்டிற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
பதக்கங்களை வென்ற தலைமையிட டிஜிபி வினித்தேவ் வாங்கடே, ஐஜி ராஜேஸ்வரி உள்ளிட்டோரை தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதிகளை வழங்கினார்.