ஆள்­மா­றா­­ட்டம் மூலம் ரூ. 5 கோடி நில மோசடி: தலை­ம­றை­வாக இருந்த நபர் கைது

144

ரூ. 5 கோடி மதிப்புள்ள வீட்டுடன் கூடிய நிலத்தை ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் முலம் அபகரித்த வழக்கில் நீண்ட நாட்­க­ளாக தலை­ம­றை­வாக இருந்த ந பரை போலீ­சார் கைது செய்­த­னர்.

சென்னை, தேனாம்­பேட்­டையைச் சேர்ந்­தவர் தாராசந்த். இவர் சென்னை போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் ‘எனக்கு சொந்தமாக சென்னை தேனாம்பேட்டையில் 1 கிரவுண்ட் 1,262 சதுரடிகள் கொண்ட நிலம் மற்றும் வீடு உள்­ளது. அதனை எனது தாயாரைப் போல் ஆள்மாறாட்டம் செய்து போலியான பொது அதிகாரம் தயாரித்து சொத்தை விற்பனை செய்துள்­ளனர், மேலும் வங்கியில் அந்தச் சொத்­தினை அடமானம் வைத்து ரூ. 3,03,28,000- கடன் பெற்றும் சிலர் மோசடி செய்­துள்­ளனர். அவர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்” என கூறி­யி­ருந்தார்.

இந்த புகார் மீது நட­வ­டிக்கை எடுக்கும்­படி கமி­ஷனர் அருண் சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீ­ஸ் நில மோசடி தடுப்­புப்­பி­ரி­விற்கு உத்­த­ர­விட்டார். கூடுதல் கமி­ஷனர் ராதிகா மேற்­பார்­வையில் துணை ஆணையாளர், நிலமோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் மேற்பார்வையில் தனிக்­­குழு போலீசார் விசா­ரணை நடத்­தினர். அதனைத் தொடர்ந்து இந்த மோச­டியில் ஈடு­பட்ட கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி (59) என்பவரை 26.04.2024 அன்று கைது செய்யப்­பட்டார். இவ்­வ­ழக்கில் கோடம்­பாக்­கத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்­பவர் நீண்ட நாட்­க­ளாக தலை­ம­றை­வாக இருந்தார். அவரை நேற்று போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்­ப­டுத்தி சிறையில் அடைத்­த­னர். ஸ்ரீதர் மீது ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவில் நில மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

சென்னை நகரில், சொத்துக்கள வாங்கும் நபர்கள் விற்பனை செய்யப்படும் நிலத்தின் ஆவணங்களை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மற்றும் வருவாய் துறை அலுவலகங்களில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து சொத்துக்கள் வாங்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.