செம்­மொழி பூங்கா மற்றும் பெண்­களை இழி­வு­ப­டுத்­திய யூடி­யூபர் கைது: தென்­சென்னை சைபர்­கிரைம் போலீஸ் நட­வ­டிக்­கை

164

சென்னை செம்மொழி பூங்கா மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யூடியூப்பில் (youtube) வீடியோ பதிவிட்ட நபரை தென்­செ­ன்னை சைபர்­கிரைம் போலீசார் கைது செய்­த­னர்.

நேற்று (29.07.2024), சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல கணினிசார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் (South Zone Cyber Crime PS), தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் ஒரு புகார் அளித்தார். நான் தினந்தோறும் காலையில் செம்மொழி பூங்காவில் நடை­ப­யிற்சி செல்­­கிறேன். அதன் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிப்படுத்தும் வகையில் ஆபாசமான உடல் மொழி சைகளை வீடியோ பதிவு செய்து அந்த காணொளியை youtube ல் பதிவேற்றம் செய்துள்ளனர். அத­­னை பிரியாணி மேன் என்ற youtube channel நடத்தி வரும் அபிசேஷக் ரபி என்பவர் பதி­விட்­டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் அவர் கூறி­யி­ருந்­தார்.

தென்­சென்­னை இணைக்­க­மி­ஷனர் சிபிச்­சக்­க­ர­வர்த்தி மேற்­பார்­வையில் சென்னை தெற்கு மண்டல சைபர்­ கிரைம் போலீசார் BNS ACT, IT Act, Indecent representation of Women (Prohibition) Act and தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசா­ர­ணை நடத்­தி­னர். அத­னை­ய­டுத்து அபிஷேக் ரபி (29) என்பவரை நேற்று (29.07.2024) போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அபிஷேக் ரபி நேற்று (29.07.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.