தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லையில் அரி­வாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்­டிய 6 பேர் ரவுடி கும்பல் கைது: எஸ்பி பாலாஜி சர­வணன் நட­வ­டிக்­கை

142

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரி­வாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்­டிய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்­த­னர்.

­தூத்­துக்­குடி மாவட்­டத்தில் கட்­டப்­பஞ்­சா­யத்து மற்றும் கத்­தியைக் காட்டி மிரட்டல் விடு­த்து மாமூல் வசூ­லிக்கும் நபர்களை எஸ்பி பாலாஜி சர­வணன் உத்த­ரவின் பேரில் போலீசார் கண்­கா­ணித்து அவர்கள் மீது சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்டு வரு­கின்­றனர். இதன் தொடர்ச்­சி­யாக தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஆதாம் அலி தலைமையிலான போலீசார் நேற்று (19.07.2024) ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை ஜங்ஷன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் முடிவைத்தானேந்தல், கிழக்குத் தெருவைச் சேர்ந்த மாடசாமி (28), யாதவர் தெருவைச் சேர்ந்த முத்துமாலை (24), தூத்துக்குடி அண்ணாநகர் மகாகிருஷ்ணன் (எ) மந்திரி (26), திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பொன்முத்துராம் (21), மேலதட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி (20) மற்றும் புதுக்கோட்டை வர்த்தகரெட்டிபட்டியைச் சேர்ந்த சிவகுருநாதன் (21) ஆகியோர் என்பது தெரி­ய­வந்­த­து. இவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு அரிவாள் மற்றும் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரிகளான மாடசாமி, முத்துமாலை, மகாகிருஷ்ணன் (எ) மந்திரி, பொன்முத்துராம், ராஜபாண்டி மற்றும் சிவகுருநாதன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.