ரூ. 2 கோடி நிலத்தை ஆள்­மா­­றாட்டம் மூலம் அப­க­­ரித்த கணவன் மனைவி கைது: சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசார் நட­வ­டிக்­கை

134

ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்தை ஆள்மாறாட்டம் மூலம் நிலத்தை அபகரிப்பு செய்த கணவன் மனைவியை சென்னை மத்­திய குற்றப்­பி­ரிவு போலீ­சார் கைது செய்­துள்­ள­னர்.

சென்னை பாரிமுனை தம்பு நாயக்கன் தெருவைச் சேர்ந்­தவர் நிரஞ்சனின் தந்தை தகப்பனார் சாந்திலால் என்பவர் கடந்த 1995ஆம் ஆண்டு 60 சதுரஅடி UDS 999 சதுர அடி கொண்ட இடத்தை வாங்கி அனுபவித்து வந்துள்ளார். பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு சாந்திலால் இறக்கவே அவரின் மனைவி பாமரிபாய், மகன்கள் ஜித்தேந்திர குமார், நிரஞ்சன் ஆகியோருடன் சொந்த மாநிலமான ராஜாஸ்தானுக்கு சென்று உள்ளார்கள்.

இந்த சமயத்தில் பாமரிபாய் அந்த இடத்தை அவர்களது உறவினரான ரங்கோட் சிங் என்பவரை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட ரங்கோட் சிங் மற்றும் அவரது மனைவி ஜந்தா தேவி ஆகியோர் பாமிரிபாய் மற்றும் ஜித்தேந்திர குமார் போன்று ஆள்மாறாட்டம் நபர்கள் மூலமாக மேற்படி சொத்தை போலி ஆவணங்கள் மூலமாக நில அபகரிப்பு செய்துள்ளனர்.

அது தொடர்­பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நிரஞ்சன் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்­தீப்ராய் ரத்­தோ­ரிடம் புகார் அளித்தார். அது தொடர்­பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி புலனாய்வு பிரிவில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் எதிரிகள் ஒன்றாக கூட்டுச்சேர்ந்து புகார்தாரரின் தாயார் பாமிரிபாய் மற்றும் சகோதரன் ஜித்தேந்திர குமார் போன்று ஆள்மாறாட்டம் செய்து அதன் மூலமாக போலி ஆவணங்கள் தயாரித்து அந்த இடத்தை அபகரித்து உள்ளது விசாரணையில் தெரியவந்த­து.

எனவே இந்த வழக்கில் தொடர்புடைய நபர்­களை கைது செய்ய கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் உத்­த­ரவின் பேரில் மத்­திய குற்­றப்­பி­ரிவு கூடுதல் கமி­­ஷனர் செந்தில்குமாரி ஆலோ­ச­னையின் பேரில் துணை ஆணையாளர் ஆரோக்கியம் மேற்­பார்­வையில் மத்திய குற்றப்பிரிவு, LFIW-II, பிரிவு காவல் உதவி ஆணையாளர் ராஜாபால் மேற்பார்வையில், காவல் உதவி ஆய்வாளர் அருண் மற்றும் காவல் குழுவினர்களுடன் நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த ரங்கோட் சிங் (47), அவரது மனைவி ஜந்தாதேவி (44) ஆகியோரை 25.03.2024ம் தேதி கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (26.03.2024) கனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.