நி­ல­ மோ­சடி வழ­க்கில் ஆசா­மிக்கு 3 ஆண்டு ஜெயில்­

131
2008ம் ஆண்டு போரூரில் ரூ 2 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பச்சையப்பன் (72)   என்பவருக்கு சொந்தமாக போருரை அடுத்து செட்டியார் அகரத்தில் ரூ 2 கோடி மதிப்புள்ள சுமார் 1.10 ஏக்கர் நிலம் உள்­ளது. அதனை பச்சை­யப்பன் தனது அக்காள் லட்சுமி மற்றும் அவரது மகன் இளம்பரிதி ஆகியோர் கூட்டாக சேர்ந்து போலியான உயில் சாசனத்தை எழுதி அதில் தனது அப்பாவின் கையெழுத்தை போலியாக போட்டு கமலக்கண்ணன் என்பருக்கு கிரையம் செய்து மோசடி செய்ததாகவும், இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2008-ம் வருடம் பச்சையப்பன் கொடுத்த  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக, சென்னை, எழும்பூர், CCB & CBCID நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (25.03.2024) தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி இளம்பரிதி மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால், குற்றவாளி இளம்பரிதிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கனம் எழும்பூர் CCB & CBCID நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் தொடர்புடைய லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வராஜ் என்பவர் ஆஜராகி திறம்­பட வாதாடினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த மத்திய குற்றப்பிரிவு, நிலமோசடி விசாரணை பிரிவு -2 காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்,