இன்றுடன் பணி நிறைவு பெற்ற துணைக்கமிஷனர் உள்பட 29 போலீசாருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு

150

சென்னை நகர காவல்துறையில் பணியாற்றி இன்றுடன் பணி நிறைவு பெறும் துணைக்கமிஷனர் உள்பட 29 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் 29 பேரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த சென்னை நகர காவல் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையர் சங்கரன், கீழ்ப்பாக்கம் போக்குவரத்து உதவிக்கமிஷனர் வெங்கடேசன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பத்மநாபன், நாகராஜன் மற்றும் அமைச்சுப் பணியாளர் கண்காணிப்பாளர் ஹெலன்மேரி, 18 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 6 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என 29 காவல் அலுவலர்கள் இன்று (31.12.2024) பணி ஓய்வு பெறுகின்றனர்.

இன்று (31.12.2024) வேப்பேரி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் 25 ஆண்டுகள் முதல் 41 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும், சென்னை பெருநகர காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து, சால்வை மற்றும் மாலை அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கினார். ஓய்வு பெற்ற காவல் குடும்பத்தினரிடம், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக நன்றி தெரிவித்தார். மேலும், ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது குறைகள் தெரிவிக்க விரும்பினாலோ தன்னை நேரில் சந்தித்து முறையிடலாம் என கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ஓய்வு பெற்ற காவல் அலுவலகர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், காவல் இணை ஆணையாளர், தலைமையிடம், கயல்விழி, துணை ஆணையாளர்கள் மணிவண்ணன் (தலைமையிடம்), சீனிவாசன் (நிர்வாகம்), காவல் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அலுவலர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.