முதல்வரை கொச்சைப்படுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தர்மபுரி ஆசாமி: சென்னை சைபர்கிரைம் போலீஸ் நடவடிக்கை
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் முனுசாமி. சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் கடந்த 5ஆம் தேதியன்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை டுவிட்டரில் கொச்சையாக காண்பித்து பொதுமக்களுக்கும் அல்லது எந்தவொரு தனிப்பட்ட நபருக்கும் அல்லது அரசுக்கு எதிராகவும் பொது அமைதியை தூண்டும் வகையில் இருந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி மேற்பார்வையில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் முதல்வரை டுவிட்டர் தளத்தில் பதிவிட்ட நபர் தருமபுரி, செல்லியம்பட்டி, மணிபூர் கிராமத்தைச் சேர்ந்த சித்தனின் மகன் காளியப்பன் (28) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் 7ம் தேதியன்று தருமபுரியில் வைத்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து Twitter(X) தளத்தில் வீடியோ பதிவு செய்ய செய்ய பயன்படுத்திய செல்போன் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் காளியப்பன் சென்னை எழும்பூர் கூடுதல் முதன்மை பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பொதுமக்கள் அனைவரும் ஆன்லைன் சமூக வலைதளங்களில் பதிவுகளை பதிவிடுவதற்கு முன் அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பதிவிட வேண்டும் என்றும் மேலும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் எந்தவொரு பதிவும் பொதுமக்களுக்கும் அல்லது எந்தவொரு தனிநபருக்கும் அல்லது அரசாங்கத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்திலோ பொது அமைதியை கெடுத்து பிரச்சனையை தூண்டும் விதமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.