இறந்து போன கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ரூ. 5 லட்சம் நிதி உதவி

162

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இறந்து போன சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு அமைச்சுப் பணியாளர்கள் திரட்டிய ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் அமைச்சுப்பணியாளர்கள் பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த பி. ஜலால் போஸ் உடல் நலக்குறைவால் 21.01.2023 அன்று காலமானார். அவரது குடும்பத்துக்கு உதவுவதற்காக, தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் ரூ. 5,00,000- நிதி திரட்டினர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் 22.12.2023 அன்று காவல் ஆணையரகத்தில், இறந்து போன கண்காணிப்பாளர் ஜலால்போஸ் மனைவி மேபல் அவர்களிடம் ரூ. 5,00,000-க்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சென்னகேசவன், மாநில பொதுச் செயலாளர் சத்தியேந்திரன், மாநில துணைத்தலைவர் ஜெ. சுப்புராயலு, மாநில நிர்வாகிகள் பெருநகர அலுவலக கிளை சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.