உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி: கமிஷனர் அமல்ராஜ் பங்கேற்பு

171

சென்னை தாம்பரத்தில் நடந்த உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கலந்து கொண்டார்.

இன்று நவம்பர் 14 -ம் தேதி உலக நீரிழிவு நாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர காவல் மற்றும் Gleneagles Global Health City Hospital Perumbakkam இணைந்து காவல் அதிகாரிகளும் மற்றும் ஆளிநர்களும் நீரிழிவு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 14.11.2023 -ம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி துவக்கி வைத்தார். இதில் சுமார் 200 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நீரிழிவு மருத்துவர்களுடன் கலந்துறையாடல் நடைபெற்றது. இதில் உணவுமுறை பற்றியும், வாழ்க்கை முறை பற்றியும் ஆலோசனையும் மற்றும் திரையிடல் சோதனையும் அளிக்கப்பட்டது.