ரவுடிகள் உள்பட 27 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

169

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 27 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் அவர்களின் உத்தரவின்பேரில், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 01.01.2023 முதல் 01.11.2023 வரை

சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 358 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 81 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 70 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 11 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம்படுத்திய 3 குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 1 குற்றவாளி என மொத்தம் 530 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் கடந்த 26.10.2023 முதல் 01.11.2023 வரையிலான ஒரு வாரத்தில் 27 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகள் விதன்குமார் (எ) விதன், 24, கன், நமச்சிவாயபுரம், சூளைமேடு, என்பவர் கடந்த 15.09.2023 அன்று, சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றத்திற்காக, F-5 சூளைமேடு காவல் நிலையத்திலும், 2.இம்ரான், வ/39, த/பெ.அப்துல்அஜீஸ், குடியாத்தம், வேலூர் மாவட்டம் மற்றும் 3.அசோக்குமார் (எ) அசோக், வ/41, த/பெ.செந்தூரபாண்டியன், சின்ன சேக்காடு, மணலி, சென்னை ஆகிய இருவரும் கடந்த 20.09.2023 அன்று விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக, P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்திலும், 4.ஆகாஷ் (எ) துப்பாக்கி ஆகாஷ், வ/22, த/பெ.வெங்கடேசன், புது வண்ணாரப்பேட்டை, சென்னை என்பவர் கடந்த 17.09.2023 அன்று விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக, H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், 5.ரவிகுமார் (எ) ராக்கப்பன், வ/44, த/பெ.அங்குசாமி, மானாமதுரை தாலுக்கா, சிவகங்கை மாவட்டம் என்பவர் கடந்த 10.10.2023 அன்று வீடு புகுந்து தங்க நகைகள் பறித்துச் சென்ற குற்றத்திற்காக, R-1 மாம்பலம் காவல் நிலையத்திலும், 6.அசோக்குமார், வ/24, த/பெ.இளங்கோ, சாலைமாநகர், புரசைவாக்கம், சென்னை மற்றும் 7.கரண், வ/23, த/பெ.நீலகண்டன், பிரிக்ளின் ரோடு, புரசைவாக்கம், ஆகிய இருவரும் கடந்த 16.10.2023 அன்று, அடிதடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக G-1 வேப்பேரி காவல் நிலையத்திலும், 8.ராஜிவ், வ/29, த/பெ.முருகன், ஆவடி, சென்னை மற்றும் 9.ராஜேஷ், வ/36, த/பெ.முருகேசன், வெள்ளனூர், திருவள்ளூர் மாவட்டம் ஆகிய இருவரும் கடந்த 22.09.2023 அன்று, வீடு புகுந்து தங்கநகைகள் பறித்துச் சென்ற குற்றத்திற்காக V-1 வில்லிவாக்கம் காவல் நிலையத்திலும், வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், 10.ரூபன், வ/35, த/பெ.எட்வர்டு, புளியந்தோப்பு, சென்னை, 11.அருண்குமார் (எ) வண்டு அருண், வ/25, த/பெ.நாராயணசாமி, புளியந்தோப்பு, 12.சரவணன் (எ) வெள்ளை சரவணன், வ/32, த/பெ.குணசேகரன், புழல், சென்னை, 13.விக்னேஷ் (எ) விக்கி, வ/23, த/பெ.ரமேஷ், வீராபுரம், சென்னை, 14.கிஷோர்குமார் (எ) கிஷோர், வ/23, த/பெ.உமாசங்கர், மாதவரம், சென்னை, 15.பிரபாகரன் (எ) பிரபா, வ/24, த/பெ.கனகசபை, குன்றத்தூர், சென்னை ஆகிய 6 நபர்களும் கடந்த 10.09.2023 அன்று சத்யா என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, F-2 எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதே போல, 16.சிபி, வ/30, த/பெ.தாராநாத், திருவனந்தபுரம், கேரளா மாநிலம் மற்றும் 17.சிவா (எ) மணலி சிவா, வ/26, த/பெ.மாரியப்பன், மணலி, சென்னை ஆகிய இருவரும் கடந்த 08.10.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, G-7 சேத்துப்பட்டு காவல் நிலையத்திலும், 18.அப்புராஜா, வ/27, த/பெ.காதர், திருவல்லிகேணி, சென்னை மற்றும் 19.தமீம் அன்சாரி, வ/28, த/பெ.பாபு, ஆயிரம்விளக்கு, சென்னை ஆகிய இருவரும் கடந்த 22.09.2023 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், 20.கன்னியப்பன், வ/34, த/பெ.தர்மன், கே.கே. நகர், சென்னை, 21.சுரேஷ் @ மாயா, வ/33, த/பெ.மணி, மயிலாப்பூர், சென்னை, 22.நித்யானந்தம் @ நித்யா, வ/42, த/பெ.மோகன், மயிலாப்பூர், சென்னை, 23.கோபால் @ குள்ள பாலா, வ/33. த/பெ.சுப்பிரமணி, வடபழனி, சென்னை, 24.சையத் அலி @ அப்புனு, வ/33, த/பெ.அப்துல்சம்பத் @ அப்துல்சமத், கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை, 25.பவித்ரன் @ பௌதி, வ/28, த/பெ.பார்த்தசாரதி, சண்முகம் பிள்ளை தெரு, மயிலாப்பூர், சென்னை ஆகிய 6 நபர்களும் கடந்த 11.10.2023 அன்று சரவணன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, T-4 மதுரவாயல் காவல் நிலையத்திலும், 26.தமிழரசன், வ/22, த/பெ.ராமலிங்கம், வால்டாக்ஸ் சாலை, சென்னை 27.வசந்த்குமார், வ/23, த/பெ.முனுசாமி, வால்டாக்ஸ் சாலை, ஆகிய 2 நபர்களும் கடந்த 11.10.2023 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக, C-3 ஏழுகிணறு காவல் நிலையத்திலும், வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் விதன்குமார் (எ) விதன், இம்ரான், அசோக்குமார் (எ) அசோக், ஆகாஷ் (எ) துப்பாக்கி ஆகாஷ் ஆகிய 4 நபர்களை கடந்த 26.10.2023 அன்றும், ரவிக்குமார் (எ) ராக்கப்பன், அசோக்குமார், கரண், ராஜீவ், ராஜேஷ் ஆகிய 5 நபர்களை 27.10.2023 அன்றும், ரூபன், அருண்குமார் (எ) வண்டு அருண், சரவணன் (எ) வெள்ளை சரவணன், விக்னேஷ் (எ) விக்கி, கிஷோர்குமார் (எ) கிஷோர், பிரபாகரன் (எ) பிரபா ஆகிய 6 நபர்களை கடந்த 30.10.2023 அன்றும், சிபி, சிவா (எ) மணலி சிவா, அப்புராஜா, தமீம்அன்சாரி ஆகிய 4 நபர்களை கடந்த 31.10.2023 அன்றும், கண்ணியப்பன், சுரேஷ் (எ) மாயா, நித்தியானந்தம் (எ) நித்யா, கோபால் (எ) குள்ள கோபாலா, சையது அலி (எ) அப்புனு, பவித்ரன் (எ) பௌதி, தமிழரசன், வசந்த்குமார் ஆகிய 8 நபர்களை நேற்றும் (01.11.2023), குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 27 குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.