63 புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு: ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நடவடிக்கை

165

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் சங்கர் தலைமையில் கடந்த 05.07.2023ம் தேதி முதல் தொடர்ச்சியாக புதன் கிழமைதோறும் பொது மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இக்குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து புகார்களை பெற்று உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக இன்று 18.10.2023 நடத்தப்பட்ட 14வது வாரம் குறை தீர்ப்பு முகாம், ஆவடி கமிஷனர் சங்கர் தலைமையில் தலைமையில் நடைபெற்றது. இந்தக் குறை தீர்ப்பு முகாமில் ஆவடி காவல் ஆணையரக அனைத்து காவல் அதிகாரிகளும் கலந்துக் கொண்டு, முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட 18 மனுக்கள், காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்த 63 புகார் மனுக்கள் மீது விசாரித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 43 புதிய மனுக்களை உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண கமிஷனர் சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.