கமிஷனர் சங்கர் தலைமையில் ஆவவடியில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

176

ஆவடியில் போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.

முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் வாரந்தோறும் போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் வாரந்தோறும் நேரடியாக பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து புகார்களை பெற்று தீர்வு கண்டு வருகிறார்.

கடந்த 05.07.2023ம் தேதி முதல் தொடர்ச்சியாக புதன்கிழமைதோறும் இந்த மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று 13வது வாரம் குறை தீர்ப்பு முகாமில் கமிஷனர் சங்கர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றார். இதில் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து 26 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்த 69 புகார் மனுக்கள், தமிழ்நாடு காவல் துறை இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட 23 புகார் மனுக்கள் மீது விசாரிக்க நடடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 45 புதிய மனுக்களை உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண கமிஷனர் சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் தொடர்ச்சியாக நடைபெறும் என்று ஆவடி கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.