வேலூரில் cell Tracker மூலம் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

172

வேலூர் மாவட்டத்தில் தொலைந்து போன ரூ. 40 லட்சம் செல்போன்கள் cell Tracker மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த 03.07.2023-ம் தேதி வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் இணைந்து தொலைந்துபோன மற்றும் களவுபோன செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க cell Tracker என்ற Google Form-ஐ வேலூர் மாவட்ட பொது மக்களுக்காக அறிமுகப்படுத்தினார்கள். Cell Tracker-ல் 9486214166 என்ற WhatsApp எண்ணிற்கு “Hi” என்ற Message அனுப்பி தொலைந்து போன மற்றும் களவுபோன செல்போன் தொடர்பாக புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 03.07.2023-ம் தேதி முதல் வேலூர் மாவட்டத்தில் 821 புகார்கள் பதிவுசெய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக 162 செல்போன்கள் 21.07.2023-ம் தேதி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் துரித நடவடிக்கையின் மூலம் 10.10.2023-ம் தேதி இரண்டாம் கட்டமாக சுமார் 40 லட்சத்து 47 ஆயிரம் மதிப்புள்ள 210 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 372 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்களது செல்போன்களை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.