சென்னை, தேனாம்பேட்டை, மவுண்ட் ரோட்டிலுள்ள ரூபாய் 20 கோடி மதிப்பிலான டாக்டருக்கு சொந்தமான இடத்தை ஆள்மாறாட்டம் மூலமாக அபகரிப்பு செய்த இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த டாக்டர் மனு அலெக்ஸாண்டர் என்பவருக்கு சொந்தமாக தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் சுமார் 3,149 சதுரடி கொண்ட கட்டிடம் உள்ளது. இந்த இடத்தை சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சார்ந்த அப்துல் லதீப் இப்ராகிம், ஷேக் அப்துல் காதர், பீர் முதுமது மற்றும் சிலர் போலி ஆவணங்கள் தயாரித்தும் ஆள்மாறாட்டம் செய்தும் நில அபகரிப்பு செய்துள் ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோரிடம் புகார் மனு அளித்தார்.
அவரது உத்தரவின் பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, மத்தியக் குற்றப்பிரிவு -3, காவல் துணை ஆணையாளர் ஆரோக்கியம் ஆகியோர் மேற்பார்வையில் மத்தியக் குற்றப்பிரிவு, நில மோசடி புலனாய்வு பிரிவு-2, காவல் உதவி ஆணையாளர் ராஜாபால், நில மோசடி புலனாய்வு பிரிவு-2, அணி-22, காவல் ஆய்வாளர் பொன்சிதரா தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில் மோசடி நடந்தது உறுதியானது. அதனையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதனையடுத்து தனிப்படை போலீசார் நில மோசடியில் ஈடுபட்ட சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஷேக் அப்துல் காதர் (54, சூளைமேடு பீர் முகமது (56) ஆகிய இருவரையும் நேற்று (20.09.2023) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.