முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் வாரா வாரம் பொதுமக்களிடம் புகார்மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும்படி ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் பொதுமக்களை நேரடியாக சந்தித்து புகார் மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

வாரம் தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்கள் பெறப்படுகின்றன. புதன்கிழமையான இன்று (13.09.2023) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 4 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 48 மனுதாரர்கள் என மொத்தம் 52 மனுதாரர்கள் தங்கள் குறைகளை எஸ்பி பாலாஜி சரவணனிடம் நேரடியாக புகார் மனு அளித்தனர். அவற்றை கனிவுடன் கேட்டறிந்த எஸ்பி பாலாஜி சரவணன் உடனடியாக அந்த புகார்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.