திரைப்பட நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானார். சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர் பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் கூட இவர் நடித்திருந்தார்.