சென்னை செங்குன்றத்தில் கோஷ்டிமோதலில் நடந்த இரட்டைக் கொலையில் குற்றவாளிகளை போலீசார் 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தனர்.

ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் நேற்று நள்ளிரவில் இருதரப்பினருக்கு இடையே முன்விரோதம் காரணமாக கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் பெருங்காவூர் பகுதியைச் சேர்ந்த விஜய் (26), ஸ்ரீநாத் (20) இருவரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். இணைக்கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு விச்சூரைச் சேர்ந்த டெல்லி, கண்ணம்பாளையம் மணிகண்டன் ஸ்ரீகாந்த், நரேஷ் ஆகிய 3 நபர்களை போலீசார் 12 மணி நேரத்தில் கைது செய்தனர். மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.