புழல் சிறைக்கைதிகள் 19 பேர் விடுதலை

170

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 19 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூன்றாம் கட்டமாக, 66 சதவீதம் சிறை தண்டனையை அனுபவித்த 19 சிறைக்கைதிகளுக்கு அரசாங்கத்தால் சிறப்பு நிவாரணம் வழங்கப்பட்டு அவர்கள் இன்று 15.08.2023 சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். குறிப்பாக புழல் சிறையில் 10 சிறை வாசிகளும், கடலூர் சிறையில் 4 சிறை வாசிகளும், திருச்சி சிறையில் 3 சிறை வாசிகளும், வேலூர் சிறையில் 2 சிறை வாசிகள் என 19 சிறைவாசிகள் தமிழக அரசின் உத்தரவுப்படி சுதந்திர தினமான இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.