சென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


சென்னை தரமணி. எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சுரேஷ், 23 கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக தரமணி காவல் நிலையத்திலும், ஓட்டேரியைச் சேர்ந்த லாரன்ஸ் (எ) குள்ள லாரன்ஸ், 27 என்பவர் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டதற்காக பெரியமேடு காவல் நிலையத்திலும், புதுப்பேட்டை ராஜ்குமார் (எ) ராசு, 22, என்பவர் வழிப்பறி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதற்காக எழும்பூர் காவல் நிலையத்திலும், கோடம்பாக்கம் மணிகண்டன் (எ) கீரை மணி என்பவர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேற்படி குற்றவாளிகள் சுரேஷ், லாரன்ஸ் (எ) குள்ள லாரன்ஸ், ராஜ்குமார் (எ) ராசு மற்றும் மணிகண்டன் (எ) கீரை மணி ஆகியோரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் 4 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று (14.07.2023) உத்தரவிட்டார்.