சென்னை சைதாப்பேட்டையில் 406 கிலோ குட்கா சிக்கியது

171

சென்னை, சைதாப்பேட்டையில் லோடு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 406 கிலோ குட்காவை போலீசார் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

சென்னை நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கமிஷனர் சங்கர்ஜிவால் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டை போலீசார் நேற்று சென்னை சைதாப்பேட்டை, கிழக்கு ஜோன்ஸ் ரோடு அருகே கண்காணிப்பு பணியில் இருந்த போது அந்த வழியாக வந்த டாடா ஏஸ் லோடு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உள்ளே ஹான்ஸ், கூல்லிப், விமல், எம்டிஎம் உட்பட 406 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் குட்காவை கடத்தி வந்த சைதாப்பேட்டை, ஜோன்ஸ் ரோட்டைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (32) என்பவரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.