கர்னாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்னாடகாவில் மே 10-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் மே 13-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கர்னாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24 ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து கர்னாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 224 சட்டசபை தொகுதிகளை கொண்ட கர்னாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தற்போது கர்னாடகாவில் 119 எம்எல்ஏ-க்களுடன் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு 75 எம்எல்ஏ-க்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 28 எம்எல்ஏ-க்களும் உள்ளனர். கர்னாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.