புளியந்தோப்பில் 733 மதுபாட்டில்கள் பறிமுதல்: பெண் உள்பட 2 பேர் கைது

156

சென்னை, புளியந்தோப்பு பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த பெண் உட்பட 2 நபர்களை போலீசார் கைது செய்து 733 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை, புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் இன்று (06.09.2023) காலை, புளியந்தோப்பு, ஜெ.ஜெ நகர், 7வது தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தனர். அப்போது, அங்கு விற்பனைக்காக சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த பரத்குமார் (33), திருமலர் (37) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 733 மது பாட்டில்கள், 10 கிலோ மாவா, 5 கிலோ 100 கிராம் ஹான்ஸ் மற்றும் பணம் ரூ. 5,740- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பரத்குமார் மீது ஏற்கனவே 1 கொலைமுயற்சி வழக்கு, அடிதடி, கஞ்சா என 6 குற்ற வழக்குகளும், திருமலர் மீது 1 மதுபாட்டில் வழக்கு உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் இன்று (06.09.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.