பெரியமேடு, வியாசர்பாடியில் 7 கிலோ கஞ்சா சிக்கியது: 2 பேர் கைது

170

சென்னை, பெரியமேடு மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணைக்கமிஷனர் திஷா மிட்டல், திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் மேற்பார்வையில் திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் போதைப்பொருள் குறித்து தீவிர கண்காணிப்பு சோதனைகள் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக காவல் குழுவினர் நேற்று (02.09.2023) பெரியமேடு, மூர் மார்கெட் அருகே சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த கேரளா, ஆளப்புலாவைச் சேர்ந்த அனஸ் யாகியா, 39 என்பவரை கைது கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட முகமது ரிபாதின் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதே போல, வியாசர்பாடி சாமியார் தோட்டம், 1வது தெருவில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த முகமது எம்கேபி நகரைச் சேர்ந்த ரிபாதின், 36 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அனஸ் யாகியா மற்றும் முகமது ரிபாதின் ஆகிய இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (02.09.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.