திருடு போன 627 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நடவடிக்கை

157

சென்னை ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட 627 செல்போன்களை கமிஷனர் சங்கர் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

ஆவடி காவல் ஆணையரகத்தில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும்படி கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.

அதன்படி சைபர்கிரைம் போலீசார் அது தொடர்பாக உரிய விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்தில் காணாமல்போன 627 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நேற்று உரியவர்களிடம் ஒப்படைத்தார்.