சென்னை செங்­குன்­றத்தில் 5.1 டன் ரேஷன் அரிசி பிடி­பட்­டது: சிவில் சப்ளைஸ் சிஐடி போலீசார் அதி­ரடி நட­வ­டிக்­கை

167

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி போன்ற அத்தியாவசிய இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுத்தலின் ஒரு பகுதியாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி சீமா அகர்வால் உத்தரவின் பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஐஜி ஜோஷி நிர்மல் குமார் தலை­மையில் 28.08.2024 அன்று மாலை 6 மணி­ய­ளவில் தனிப்படை போலீசார் சென்னை வெளிவட்டச் சாலை, செங்குன்றம் காந்தி நகர் அருகில் வாகன சோத­னையில் ஈடு­பட்­ட­னர்.

நெமிலிச்சேரி நோக்கி வந்த ஈச்சர் வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அதற்­குள் 5,100 கிலோ (5.1 டன்) ரேசன் அரிசி இருப்பது தெரி­யவந்தது. அதனை கடத்தி வந்த அரிசி உரிமையாளர்களான செங்குன்றத்தைச் சேர்ந்த பிரேம் குமார், மணிவண்ணன் (எ) போன்டா மணி மற்றும் ஈச்சர் வாகன ஓட்டுநரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கவியரசன் ஆகியோரை போலீசார் கைது செய்­த­னர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுந்தரராமன் என்பவரிடம் அதிக விலைக்கு கொடுப்பதற்காக ரேசன் அரிசியை கடத்தியதாக ஒப்புதல் வாக்­கு­மூலம் அளித்­த­னர். விசா­ர­ணைக்குப் பின்னர் மூவரும் கோர்ட்டில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு சிறையில் அடைக்­கப்பட்­ட­னர்.