கேகே நகரில் மனை­வியை கத்­தியால் குத்திய கண­வ­னுக்கு 5 ஆண்டு ஜெயில்: கோர்ட் தீர்ப்­பு  

101
சென்னை, கே.கே.நகரில் மனைவியை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கணவன் உட்பட இருவருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்­துள்­ள­து.
கடந்த 2020ம் ஆண்டு சென்னை, எம்.ஜி.ஆர்.நகர், சேக்கிழார் 2வது தெருவில் உள்ள வீட்டில் பொன்வேல், (42) மற்றும் அவரது மனைவி அமுதவள்ளி, 40 ஆகியோர் வசித்து வந்தனர். வேலைக்கு சென்ற அமுதவள்ளி வீட்டிற்கு வராததால், 13.10.2020 அன்று அதிகாலை பொன்வேல் அவரது நண்பர் மணிவண்ணன் என்பவருடன் சேர்ந்து கே.கே.நகர் 12வது செக்டார், 77வது தெருவில் அமுதவள்ளியை ஏன் வீட்டிற்கு வரவில்லை எனக் கேட்டு தகராறு செய்து, கத்தியால் அமுதவள்ளியை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். ரத்தக்காயமடைந்த அமுதவள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேற்படி சம்பவம் குறித்து கொடுத்த புகாரின் மீது R-7 கே.கே. நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அன்றைய தினமே எதிரிகள் பொன்வேல்,  மணிவண்ணன் ஆகி­ய இருவரை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக, சென்னை, சிங்காரவேலர் மாளிகை வளாகத்தில் உள்ள 17வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் (17th Addl. Sessions Court) வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று (29.07.2024) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதய மேற்படி வழக்கில் எதிரிகள் இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிகள் பொன்வேல் மற்றும் மணிவண்ணன் ஆகியோருக்கு தலா              5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் தலா ரூ.5,000/- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 வாரங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி  தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தந்த கே.கே. நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.