ஆறுமுகநேரியில் 4 1/2 கிலோ கஞ்சா சிக்கியது: 3 பேர் கைது: தனிப்படைக்கு எஸ்பி ஆல்பட் ஜான் பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ 500 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் சசய்யப்பட்டன. குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி ஆல்பட்ஜான் வெகுவாக பாராட்டினார்.
தூத்துக்குடி, ஆறுமுகநேரி பகுதியில் எஸ்பி ஆல்பட்ஜான் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் மேற்பார்வையில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் தலைமையில் சார்பு ஆய்வாளர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் நேற்று (17.08.2024) ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆறுமுகநேரி கணியாளர் தெரு காட்டு பகுதியில் இருசக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் ஆறுமுகநேரி கணியாளர் தெருவை சேர்ந்த பாலமுருகன் (36), ஏரல் வாழவல்லான் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (31) மற்றும் முக்காணி மேலூர் பகுதியைச் சேர்ந்த பெரியநாயகம் (42) என்பதும் விற்பனைக்காக அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 கிலோ 500 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எதிரிகளை கைது செய்து, கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசாரை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் வெகுவாக பாராட்டினார்.