39 காவல் குடும்பத்தினருக்கு ரூ. 68 லட்சம் மருத்துவ நிதிஉதவி: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கினார்

157

சென்னை நகரில் பணிபுரியும் 39 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவல் சேமநல நிதியிலிருந்து (TNPBF) ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறப்பு மருத்துவ உதவித்தொகை மொத்தம் ரூ. 68,80,201 நிதியை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கினார்.

இன்று (26.12.2023), மதியம், வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட (TNPBF) சிறப்பு மருத்துவ சிகிச்சை தொகை மொத்தம் ரூ. 68,80,201 ஒதுக்கீடு பெற்ற 39 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களூக்கு நேரில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) கயல்விழி, துணை ஆணையாளர்கள் சீனிவாசன் (நிர்வாகம்), மணிவண்ணன், (தலைமையிடம்) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.