தூத்துக்குடியில் ‘மாற்றத்தை தேடி’ 3,831வது சமூக விழிப்புணர்வு கூட்டம்

166

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதன்படி இன்று (31.01.2024) குரும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் மோசஸ் மற்றும் போலீசார் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரம் கிராம பகுதியில் பொதுமக்களிடம் ‘மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுவரை 3830 “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,20,648 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.