­சென்னை கண்­ணகி நகரில் கஞ்சா போதையில் காவ­லர்­களை தாக்­கிய 3 பேர் சிறையில் அடைப்­பு

139

சென்னை கண்­ணகி நகரில் கஞ்சா போதையில் காவ­லர்­களை தாக்­கிய 3 வாலி­பர்­களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்­த­னர்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரி சரகம், கண்ணகிநகர் காவல் நிலைய எல்லையில் நேற்று 20.04.24 மாலை 4.30 மணி அளவில் எழில் நகர் பகுதியில் ரோந்து பணியிலி ருந்த தலைமை புஷ்பராஜ் மற்றும் சிலம்பரசன் இருவரும் ரோந்து சுற்றி வந்தனர். எழில் நகர் 16 ஆவது பிளாக் அருகில் அந்த பகு­தி சுனாமி குடி­யி­ருப்பைச் சேர்ந்த பிரேம் (23), எழில் நகர் ராகுல் (22), சந்­தோஷ்­குமார் (22) ஆகியோர் கஞ்சா போதையில் கைகளில் கத்தியை சுழற்­றி­ய­படி அந்த பகு­தியில் சுற்றி வந்­த­னர். அதனைக் கண்ட ரோந்து போலீசார் அங்கு விரைந்து சென்­றனர். கத்­தி­யோடு வலம் வந்த கோகுல் என்ப வனை பிடித்து விசாரிக்க முயன்­றனர். அப்­போது ­ராகுல், தலைமைக் காவலர் புஷ்பராஜின் வலது கையை கடித்துள்ளான்.

\மேலும் போதையில் இருந்த மற்றொருவன் பிரேம், ராகுலை விடச் சொல்லி விட்டு தன் கையில் வைத்திருந்த உடைந்த பாட்டிலை வைத்து தன் நெஞ்சில் கிழித்து கொண்டு காவலர் சிலம்பரசனை தாக்க வந்துள்­ளார். இதனால் காவ­லர்கள் அந்த இரு­வ­ரையும் தங்கள் பிடி­யில் இருந்து விடு­வித்­தனர். அந்த சம­யத்தில் இரு வாலி­பர்­களும் காவ­லர்க மீது கல் எறிந்து தாக்­கினர். அத­னை­ய­டுத்து தலைமைக் காவலர் புஷ்பராஜ் கண்ணகி நகர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று முதலுதவி சிகிச்சை பெற்றார். இந்த சம்­பவம் தொடர்­பாக கண்ணகி நகர் காவல் நிலையத்தில் காவலர் சிலம்­ப­ரசன் புகார் அளித்­தார்.

மேலும் காவ­லர்­களை போதை வாலி­பர்­களால் தாக்­கப்­படும் காட்­சிகள் இணையத்தில் வைர­லா­கி­ பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­ன. இந்தச் சம்­பவம் தொடர்­பாக கண்­ணகி நகர் போலீசார் வழக்­குப் பதிவு செய்து, காவ­லர்­களை தாக்­கிய போதை ஆசா­மிகள் பிரேம், ராகுல், சந்­தோஷ்­குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து இன்று 21.04.2024 நீதி­மன்றத்தில் ஆஜர்­­ப­டுத்­தி சிறையில் அடைத்­த­னர்.