அம்பத்தூரில் போலீசை தாக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் 25 பேர் அதிரடி கைது

162

ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Blue Packaging India pvt ltd என்ற இடத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கி உள்ளார்கள். கடந்த 23.10.2023 ஆயுத பூஜை தினத்தன்று குடிபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வந்த தகவலின் அடிப்படையில் T2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய காவலர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கி இருந்த இடத்திற்கு விசாரணைக்காக சென்றார்கள். அச்சமயம் குடிபோதையில் இருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து சட்ட விரோதமாக நடந்து கொண்டார்கள். இது தொடர்பாக ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் படி அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 25.10.2023 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு இன்று (28.10.2023) துகி ராஜ்வன்சி (20), மனோஜ் ராஜ்வன்சி (30), கணேஷ்லால் ராஜ்வன்சி (22), மதன்குமார் (30), முகேஷ் ராஜ்வன்சி (26), சஞ்சய் குமார் (25), சூரஜ் குமார் (20), ராஜேஷ் பண்டிட் (26), ரவி ராஜ்வன்ஷி (19), பிரேம் குமார் (20), பிகாஷ் குமார் (20), ரவிக்குமார் (19), கரஞ்சீத் குமார் (24), சங்கர் கேவட் (30), சந்தன் (19), உபேந்திர ராஜ்வன்ஷி (31), ஆஷிஷ் ராஜ்வன்ஷி (33), லக்ஷ்மண் குமார் (22), சகலாதிப் ராஜ்வன்சி (40) ), குல்ஷன் குமார் (27), அனுப் ராஜ்வன்சி (27), ராஜ்பிளாம் குமார் (22), கரு ரவிதாஸ் (33), அனுஷ் சர்மா (28), அர்பிந்த் குமார் (21), குட்டு பண்டிட் (28), ஸ்ரீநந்தன் ராஜ்வன்சி (25), தன்ராஜ் (19) ஆகிய 28 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கைது நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.