2,215 கிலோ கஞ்சா உள்­ளிட்ட போதைப் ­பொ­ருட்கள் தீயி­லிட்டு அழிப்பு: * போதைப்­பொருள் தடுப்பு நுண்­ண­றி­வுப்­பி­ரிவு போலீசார் நட­வ­டிக்­கை

105

தமி­ழகம் முழு­வதும் பல்­வேறு வழக்­கு­களில் பறி­மு­த­ல் செய்­ய­ப்­பட்ட கஞ்சா உள்­ளிட்ட போதைப்­பொ­ருட்கள் இன்று தீயி­லிட்டு எரித்து அழி­த்து போதைப்­பொருள் தடுப்பு நுண்­ண­றி­வுப்­பி­ரிவு போலீசார் நட­வ­டிக்கை மேற்­­கொண்­டுள்­ளனர்.

: போதை ஒழிப்பு நுண்­ண­றி­வுப்­பி­ரிவு போலீ­சாரால் 187 வழக்­கு­களில் பறி­மு­த­ல் செய்­ய­ப்­பட்ட 2,215 கிலோ கஞ்சா உள்­ளிட்ட போதைப்­பொ­ருட்களை தமிழ்­நாடு குற்­றம் ­பு­ல­னாய்­வுப் ­பி­ரிவு ஐஜி செந்­தில்­கு­மாரி தீயி­­லிட்டு அழித்தார். அருகில் எஸ்­பி மயில்­வா­கனன் உள்­ளார்.

போதையில்லா தமிழ்நாடு என்ற முதல்வர் ஸ்டாலின் குறிக்­கோளின் முயற்­சியாக தமி­ழகம் முழு­வதும் போதைப்­பொ­ருட்­களின் கடத்தலை தமிழ்­நாடு போதைப்­பொருள் தடுப்பு நுண்­ண­றி­வுப்­பி­ரிவு போலீ­சார் தீவி­ர­மாக கண்­கா­ணித்து அதனை தடுத்து வரு­கின்­றனர். கடந்த சில­ நாட்­க­ளுக்கு முன்பு பெரிய நெட்­ஒ­ர்க்­காக செயல்­பட்ட கீழக்­கரை போதை ஆசா­மி­க­ளிடம் இருந்து ரூ. 6 கோடி மதிப்­புள்ள கொக்கய்ன் போதைப்­பொ­ருளை போலீசார் பறி­முதல் செய்­து 8 பேர் கும்­பலை கைது செய்­தனர்.

இந்த வகையில் தமி­ழகம் முழு­வதும் போதைப்­ பொருள் தடுப்பு நுண்­ணி­றிவுப் பிரிவு போலீ­சாரால் பறி­முதல் செய்­யப்­பட்டும் போதை மற்றும் மன­ம­யக்கும் பொருட்­கள் நீதி­மன்றம் உத்­த­ரவின் பேரில் தீயி­லிட்டு அழிக்­கப்­பட்டு வரு­கி­றது. இதன் தொடர்ச்­சி­யாக இன்­று (17.4.2025) 187 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2215.71 கிலோ உலர் கஞ்சா, 58 கிலோ சாராஸ், 1 கிலோ ஹெராயின், 1.4 கிலோ கஞ்சா சாக்லெட் போன்ற போதைப்பொருட்கள் அனைத்து சட்ட முறைகளையும் பின்பற்றி செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எரிக்கும் ஆலையில் எரிக்கப்பட்டது.

இந்த ஆண்டில் இது­வரை 253 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3628.71 கி.கி. உலர் கஞ்சா, 74.150 கிலோ ஹசிஷ், 58 கிலோ சாராஸ், 1 கிலோ ஹெராயின், 1.4 கிலோ கஞ்சா சாக்லெட்கள் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினரால் எரிக்கப்பட்டது. அம­லாக்கம் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் உத்­த­ரவின் பேரில், குற்­றப்­­பு­ல­னாய்வுப் பிரிவு ஐஜி செந்­தில்­கு­மாரி, எஸ்பி மயில்­வா­கனன் மற்றும் சென்னை தடய அறிவியல் பிரிவு நிபு­ணர்கள் போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருள்களை அழிக்கும் செயல்முறையை கண்காணித்தனர்.

போதைப்பொருள்கள் மற்றும் போதைப்பொருள்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி உதவி எண். 10581 மூலம் மற்றும் வாட்ஸ்அப் எண். 9498410581 அல்லது மின்னஞ்சல் முகவரி spnibcid@gmail.com மூலம் பகிருமாறு தமிழ்­நா­டு போதைப்­பொருள் தடுப்பு நுண்­ண­றி­வுப்­பி­ரிவு போலீசார் கேட்டுக் கொண்டுள்­ள­னர்.