8 வயது பிஞ்சை சீரழித்த காம கிழவனுக்கு 20 ஆண்டு ஜெயில்: தூத்துக்குடி போக்சோ கோர்ட் அதிரடி தீர்ப்பு

139

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய காம கொடூரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூபாய் 10,000- அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு 8 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயது காம கிழவன் சுப்ரமணியன் (56) என்பவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலா புலன் விசாரணை செய்து கடந்த 17.12.2021 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் இன்று (09.10.2023) குற்றவாளியான சுப்ரமணியனுக்கு என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 10 ஆயிரம்- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலா மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி ஆகியோரையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் முதல் நிலை காவலர் சங்கீதா ஆகியோரை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.