ஆந்திரா மாநிலம் அனங்காபள்ளியிலிருந்து தமிழகத்துக்கு 22 கிலோ கஞ்சாவை பேருந்தில் கடத்தி வந்த தூத்துக்குடி மற்றும் திருச்சியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (என்ஐபி) போலீார் கைது செய்தனர்.

கூடுதல் டிஜிபி, மகேஷ் குமார் அகர்வால், IPS.,
தமிழக காவல்துறை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு போதைப்பொருள்டகள் கடத்தி வருவது தொடர்பாக அவ்வப்போது தீவிர வாகன சோாதனை நடத்தி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக குற்றம் மற்றும் அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் நேற்று 25.09.2023 காலை 8 மணியளவில் திருவள்ளுர் மாவட்டம், எளாவூர் சோதனைச் சாவடி அருகில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் போலீசார் சகிதம் வாகன சோதனை செய்தனர்.

அப்போது ஆந்திரா, நெல்லூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பேருந்துக்குள் கஞ்சாவுடன் அமர்ந்திருந்த தூத்துக்குடி மாவட்டம் பாறைக் குட்டம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (20), திருச்சி தூவாகுடியைச் சேர்ந்த சிரஞ்சீவி (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 22 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்து வரும் மற்ற எதிரிகள் குறித்து விவரங்கள் சேகரிக்கபட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.