வேலை வாங்­கித்­த­ரு­வ­தாக ரூ. 62.8 லட்சம்: போலி பணி நிய­மன ஆணை தயார் செய்து ஏமாற்­றிய 2 கேடிகள் கைது: சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசார் நட­வ­டிக்­கை

136

தமிழ்நாடு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறிகை நபர்களிடம் ரூ 62.8 இலட்சம் பணம் பெற்று வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிய 2 கேடி­களை சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர்.

சென்­னையை அடுத்த கொரட்­டூ­ரரைச் சேர்ந்­தவர் கமலக்கண்ணன் (55). இவர் சென்னை போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் டில்­லி­குமார், மகேஷ் ஆகி­யோர் நான் உள்­பட 13 நபர்க­ளிடம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை ஆகிய துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ 62,80,000/- பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்து விட்­டனர். மேலும் போலி பணி நியமன ஆணைகளை கொடுத்து பெரிய அளவில் ஏமாற்றி அந்த நபர்கள் மீது நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும் என்று அந்த புகாரில் கூறி­யி­ருந்­தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்­த­ரவின் பேரில், கூடுதல் கமி­ஷனர் ராதிகா மேற்­பார்­வையில், மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கம­லக்­கண்ணன் அளித்த புகார் உண்மை என்­பது தெரி­ய­வந்­தது. அதனைத் தொடர்ந்து போலீசார் தனிப்­படை அமைத்து சென்னை மயி­லாப்­பூரைச் சேர்ந்த டில்லிகுமார் (60), கொளத்தூர் மகேஷ் (34) ஆகிய இருவரையும் நேற்று (19.03.2025) கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இது போன்று பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என்றும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் சென்னை நகர காவல் ஆணையர் அருண் கோரிக்கை விடுத்துள்ளார்.