180 கிலோ கஞ்சா சிக்­கி­யது: அம­லாக்­கப்­ப­ணி­யக குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு அதி­ரடி நட­வ­டிக்­கை

216

ராம­நா­த­பு­ரத்தில் இருந்து கள்­ளத்­தோ­ணி மூலம் இலங்­கைக்கு கடத்­தப்­ப­ட­வி­ருந்த 180 கிலோவை தமி­ழக அம­லாக்­கப்­ப­ணி­யக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு போலீசார் பறி­முதல் செய்து 3 பேரை கைது செய்­தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை வடக்கு கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்­ப­டு­வ­தாக அம­லா­க்­கப்­ப­ணி­யாக குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வுக்கு ஒரு ரக­சிய தகவல் வந்­தது. கூடுதல் டிஜிபி அமல்ராஜ் உத்­த­ரவின் பேரில் ஐஜி செந்­தில்­கு­மாரி, எஸ்பி மயி­ல்­வா­கனன் மேற்­பார்­வை­யில் இன்ஸ்­பெக்டர் அன்பரசி தலைமையில் சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. தனிக்கு­ழு­வினர் ப்­ப­டை­யினர் ராமேஸ்வரம், வேதாளைக்குச் சென்று, ராமநாதபுரம் மாவட்டம், வேதாளையைச் சேர்ந்த ஆர். சதீஸ்வரன் (20) என்பவரை 09.05.2025 அன்று கைது செய்தது விசாரணை நடத்­தினர். இதில் வைகை நகர் ரயில் பாதை அருகே உள்ள முட் புதர்களில் இருந்து ரூ. 18 லட்சம் மதிப்புள்ள 180 கிலோ கஞ்சாவை சிஐயு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, ராமநாதபுரம் வெத்தலையைச் சேர்ந்த காமேஷ் (25), வினோத் கண்ணன் (35) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். வேதாளையைச் சேர்ந்த சசி மற்றும் கோபி ஆகியோர், வட மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அதனை படகு மூலம் இலங்கைக்கு கடத்த ராமேஸ்வரம், வேதாளைக்கு கொண்டு வந்­தது தெரிய­வந்­தது. இது தொடர்பாக, இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடிக்க, இராமநாதபுரம் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வெற்றிகரமான நடவடிக்கையை நடத்தியதற்காக, காவல் ஆய்வாளர் திருமதி டி.அன்பரசி தலைமையிலான சிறப்பு நடவடிக்கை குழுவினை காவல்துறை கூடுதல் இயக்குநர், அமலாக்கப் பணியகம் முனைவர் ஏ. அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.