காயல்பட்டினம் தைக்கா தெருவில் அமைந்துள்ள தைக்கா சாகிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் 174-வது வருட கந்தூரி விழா 13 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் தினசரி கத்முல் குர்ஆன் ஓதுதல் மகானின், புகழ் மாலை பாடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
நிறைவு நிகழ்ச்சியில் மவுலவி அஷ்பர் அஸ்ரபி ஆலிம் சன்மார்க்க சொற்பொழிவை நிகழ்த்தினார். மகானிடம் ஞானவழி தீட்சை பெற்ற மேலப்பாளையம் புகராக்கள் சார்பில் காதிரியா திக்ரு நிகழ்ச்சி நடை பெற்றது.
உரூஸ் முபாரக் போர்வையை முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து வந்து மகானின் நினைவிடத்தில் குத்துபியா சபை சார்பாக போர்த்தும் நிகழ்ச்சியும், சிறுமிகளின் பல்லக்கு பவனியும் சிறுவர்களின் தப்ஸ் நிகழ்ச்சியும் நடந்தன. பின்னர் அனைத்து மக்களும் வளமுடன் வாழ்ந்திட வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக மவுலவிகள் அபூமஸ்வூது ஆலிம், பிரபு முகைதீன் சூபி காதிரி மற்றும் பாடகர் அகமது சாலிஹ், ஷெய்குனா ஜலீல் முகைதீன் காதிரி, கீழக்கரை அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிறைவில் நேர்ச்சை வழங்கப்பட்டது. கந்தூரி விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் முஹம்ம து இல்யாஸ், அகமது ஹாஜி,மன்சூர் ஹாஜி, முகமது லெப்பை, பாளையம் சுலைமான், உறுப்பினர்கள் சதக்கத்துல்லாஹ், அப்துர் ரஹீம் காதிரி, உமரொலி,பதுரிய்யா புகாரி ஆகியோர் செய்திருந்தனர்.