13 போலீ­சா­ருக்கு ரூ. 31 லட்சம் சேம­ந­ல­நிதி: கூடுதல் கமி­ஷனர் கபில்­குமார் சரத்கர் வழ­ங்கி­னார் 

114
சென்னை பெருநகரில் பணி­பு­ரிந்து வரும் 13 காவல் அலுவலர்களுக்கு தமிழக காவல் சேமநல நிதியிலிருந்து (TNPBF) ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறப்பு மருத்துவ உதவித்தொகை மொத்தம் ரூ.31,05,010/- வழங்கப்­பட்­ட­து.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் ஆணையளர் (தலைமையிடம்) கபில் குமார் சி சரட்கர் இன்று (11.03.2024), காலை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல் சேமநல நிதியிலிருந்து (TamilNadu Police Benevolent Fund – TNPBF) ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறப்பு மருத்துவ சிகிச்சை தொகை மொத்தம் ரூ. 31,05,010-க்கான வரைவோலைகளை, ஒதுக்கீடு பெற்ற இரண்டாம் நிலைக் காவலர் முதல் உதவி ஆய்வாளர் வரையிலான 13 காவல் அலுவலர்களுக்கு நேரில் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியின்போது, சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்)  கயல்விழி உடனிருந்தார்.