கஞ்சா கடத்தல் குற்றவாளிகள் இருவருக்கு 12 ஆண்டு ஜெயில்: கோர்ட்டு தீர்ப்பு

132

காஞ்சிபுரம் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் கடந்த 21.01.2022 அன்று திருவள்ளுர் ரயில் நிலையம் அருகில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பத்மனாபோகி (-22) மற்றும் தனம்ஜெய் காரியா, (22) ஆகியோரை சோதனை செய்த போது அவர்களிடம் 22 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் போதைப் பொருள் நுண்ணறிவுபிரிவு போலீசார் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் கடந்த 29.03.2022 அன்று சென்னை போதைப் பொருள் வழக்குகள் சிறப்பு நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்கு முடிவில் நேற்று 17.10.2023 நீதிபதி தனது தீர்ப்பில் இரு குற்றவாளிகளுக்கும் தலா 12 வருடங்கள் கடுங் காவல் தண்டனையும் மற்றும் 1.70 இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்து மற்றும் குறுகிய காலத்தில் நீதிமன்றத்தில் விசாரணை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த புலன்விசாரணை அதிகாரி மற்றும் ஆளிநர்களை குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.