சென்னை ஏழுகிணறு, தண்டையார்பேட்டை மற்றும் மதுரவாயல் பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 6 நபர்களை போலீசார் கைது செய்து 12.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இதன் தொடர்ச்சியாக, பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (19.08.2023) காலை, ஏழுகிணறு, வால்டெக்ஸ் ரோடு, பத்மநாபன் தியேட்டர் அருகில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த ராபின்,வ/20, த/பெ.மாரிமுத்து, சத்தியவேடு சித்துார், ஆந்திரா மாநிலம், என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6.2கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல, வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (19.08.2023) மதியம், தண்டையார்பேட்டை, ரயில்நிலைய ஆட்டோ நிறுத்தம் அருகே கண்காணித்து சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த மதன், வ/19, த/பெ.சுரேஷ், விநாயகர் கோயில் தெரு, கும்மிடிப்பூண்டி ,திருவள்ளுர் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
T-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்லவாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (19.08.2023) காலை மதுரவாயல், கூவம் பாலம் அருகே கஞ்சா வைத்திருந்த சூர்யா, வ,38, தமிழ்ச்செல்வன், 27, சீனிவாசன், 37, வினோத்குமார், 37 ஆகிய 4 நபர்களை கைது செய்தனார். அவர்களிடமிருந்து 2.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகள் 6 நபர்களும் நேற்று (19.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.