ஆவடி காவல் ஆணையரகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் கடந்த 05.07.2023ம் தேதி முதல் தொடர்ச்சியாக புதன் கிழமைதோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று 13.09.2023 நடத்தப்பட்ட 11வது வாரம் குறை தீர்ப்பு முகாமில் ஜுலை மாதத்தில் நிலுவையில் இருந்த 97 புகார் மனுக்களில் 75 மனுக்கள் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 72 புதிய மனுக்களை உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் தொடர்ச்சியாக நடைபெறும் என்று ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.