சென்னை பெரு­ம்­பா­க்­கத்தில் 110 கிலோ கஞ்சா பறி­முதல்: கூலித்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு விற்க முயன்ற 2 பேர் கைது: தாம்பரம் காவல் ஆணை­ய­ரகம் நட­வ­டிக்­கை

106

பெரும்­பாக்கம் பகு­தியில் கஞ்சா கடத்தல் நடை­பெ­று­வ­தாக போலீ­சா­­ருக்கு ரச­கிய தகவல் வந்­தது. தாம்பரம் போலீஸ் கமி­­ஷனர் அபின் தினேஷ் மோடக் உத்­த­ரவின் பேரில் பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீ­சார் 08.03.2025 ம் தேதி, சுமார் 8 மணியளவில் பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் மெயின் ரோடு, பொலினேனி அப்பார்ட்மண்ட் எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் ரக­சி­ய­மாக கண்­கா­ணித்­த­னர்.

அங்கு நின்­றி­ருந்த ஆந்­திரா மாநிலம், விசா­கப்­பட்­டி­னத்தைச் சேர்ந்த முருகுதி அப்பளநாய்டு (42), கெம்மெலி சத்திபாபு (32) ஆகி­யோரை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 110 கிலோ கஞ்சா மற்றும் 1 கைபேசி கைப்பற்றப்பட்டது. கஞ்­சாவை விசாகப் பட்டினம் மாநிலத்தில் இருந்து

வாங்கிவந்து பெரும்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதாக தெரி­வித்­தனர். இருவரையும் கைது செய்த போலீசார் அது தொடர்­பாக பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை செய்து வரு­கின்­றனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு 22.03.2025 வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.